முடி மாற்று அறுவை சிகிச்சை

முடி மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?
இது ஒரு அறுவை சிகிச்சை முறையாகும். இதில் உச்சந்தலையில் உள்ள பகுதிகளிலிருந்து முடி ஒருபோதும் வழுக்கை போவதில்லை. முன் நெற்றியின் பக்கவாட்டில் தொடங்கி, உச்சந் தலை வரைக்கும் வழுக்கை விழும்போது, பின்னந்தலையில் உள்ள முடியை எடுத்து வழுக்கை உள்ள இடத்தில் நடுவதற்கு முடி மாற்று அறுவை சிகிச்சை.


முடி உதிர்தலுக்கு என்ன காரணம்?
பரம்பரை, பூஞ்சை தொற்றுதல், கல்லீரல் நோய், முறையற்ற உணவுப்பழக்கம், தீரா வியாதி, இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் குறைபாடு, மன அழுத்தம், பாக்டீரியா தொற்றுதல்,தைராய்டு அல்லது ஹார்மோன் சமநிலையின்மை, பொடுகு பக்க விளைவு போன்ற காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது.


முடி மாற்று சிகிச்சை
தலையில் முடியில்லாத இடத்தில் புதிய முடி வேரோடு எடுத்து வைக்கப்படுதல். இது நிரந்தரமான தீர்வு. இந்த முடிகளை வெட்டிக் கொள்ளலாம். மொட்டை அடித்துக் கொள்ளலாம். முடி எடுத்த இடத்தில் மீண்டும் முடி வளர்ச்சி அடையும்.


உடம்பில் இருக்கும் முடி எடுத்து தலையில் வைக்கலாமா?
நமது தலையில் அதிகமாக வழுக்கை இருந்து உண்மையான முடி குறைவாக இருந்தால் உடம்பில் முடி எடுத்து தலையில் வைக்கலாம். ஆனால் சொந்த முடியை போன்று இருக்காது. அதிக நேரமாகும்.


தலையில் முடி எடுத்த இடம் பிறகு என்ன ஆகும்?
முடி எடுத்த இடத்தில் எந்தவிதமான தழும்பும் வேறு எந்த மாற்றமும் இருக்காது.


தலையில் வழுக்கையான இடத்தில் எப்படி முடி வைக்க முடியும்?
தலையில் முன்பகுதியில் உள்ள முடிகள் ஹார்மோனால் பாதிக்கப்படுவதால் வழுக்கை ஏற்படுகிறது. தலையின் பின்பகுதியிலுள்ள முடிகளை ஹார்மோனால் பாதிக்கப்படுவதில்லை. அதனால் பின்பகுதியில் இருக்கும் முடியை மறைத்து நிரந்தர தீர்வு கிடைக்கிறது. இவ்வாறு பொறுத்தும் முடி வாழ்நாள் முழுவதும் இருக்கும்.


அறுவை சிகிச்சை செய்ய எவ்வளவு நேரமாகும்?
தலையில் எந்த இடத்தில் வழுக்கை உள்ளதோ அந்த இடத்தில் உணர்வு இல்லாமல் இருப்பதற்கு ஊசி கொடுத்து முடி வைக்கப்படுகிறது. முடி வைக்கப்படும்போது பேசவும், பார்க்கவும் முடியும். அன்றைக்கே டிஸ்சார்ஜ் ஆகலாம். 1- 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும்.


சிகிச்சைக்கு பிறகு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன?
புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது. சில நாட்களுக்கு வலி மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *